crest

யாழ்ப்பாண அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்

The Official Website of the Royal Family of Jaffna (Sri Lanka)

යාපනය රාජකීය පෙළපතේ නිල වෙබ් අඩවිය

King Statue

News

மே மாதம் 20ஆம் திகதி 2021 அன்று

The Coat of Arms

ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்ආර්ය චක්‍රවර්තී රාජවංශය

Arya Cakravartti Dynasty

ஊடக வெளியீடு


மே 18, 2021 நினைவு தினத்தில் எனது மெளனம் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. இலங்கை உள்நாட்டுப் போர் மூன்று தசாப்தங்களாக நீடித்தமை குறித்து நான் மிகவும் சஞ்சலப்படுகின்றேன். எனது கருத்துப்படி இது வணிகமயமாக்கப்பட்ட போராகும். ஒரு நாடு வேறுமொரு நாட்டிற்கு எதிராக போராடவில்லை. மாறாக, ஒரே மண்ணில் பிறந்து வளர்க்கப்பட்ட இரண்டு இன சமூக மக்கள் ஒருவருக்கொருவர் எதிராக போராடின, இலங்கையர்க்கு எதிராக இலங்கையர் நடத்திய போர் இதுவாகும்.

சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுக்கிடையில் உள்நாட்டுப் போர் 1983 இல் தொடங்கியது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் நீடித்த இந்த படுகொலை 2009 இல் முடிந்தது. 12 ஆண்டுகளுக்கு முன்னர் இப் போர் முடிவடைந்த போதிலும், இரத்தத்தால் கறைபட்ட நினைவுகளின் தாக்கத்தில் நாம் இன்றும் ஈடுபட்டு வருகிறோம், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் என்று ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுகிறோம். போரிலிருந்து நாம் எதைப் பெற்றோம்? 30 ஆண்டுகால இரத்தக்களரி குறித்தே தொடர்ந்து பேசுவதன் மூலம் நாம் என்னத்தை பெற்றுக்கொள்வோம்? இரு சமூகங்களும் அப்பாவி உயிர்களை இழந்தன. நாம் கடந்த காலத்து நிகழ்வுகளிலிருந்து ஒரு பாடத்தை கற்றுக் கொள்ளவேண்டும், நம்முடைய நிகழ்காலத்தை சரிசெய்ய வேண்டும், இதனால் நம் பிள்ளைகளுக்கு நல்லதோர் நாளை கிடைக்கும்.

யுத்தத்தின் மூலம் சரிசெய்யப்படாத உடல், மன ரீதியான, பொருளாதார மற்றும் சமூக இடையூறுகள் என எச்சங்கள் இன்னும் மக்களிடையே உள்ளன. சந்தேகமே இன்றி, பாதிப்படைந்த இதயங்கள் குணமாகுவதற்கு அதிக காலநேரம் தேவைப்படுகின்றது.

கடந்த யுத்தமானது இரு இன சமூகங்களுக்குள் நோய்வாய்ப்பட்ட உணர்வுகளை ஒருவருக்கொருவர் மத்தியில் கொடுக்கும்போது, ஓர்காலத்தில் இரு சமூகங்களும் இணக்கமாக வாழ்ந்து, நண்பர்களாக மற்றும் குடும்பத்தினராக ஒருவருக்கொருவராக நகமும் சதையுமாக இருந்த பல கதைகள் மற்றும் நிகழ்வுகளுக்கு இலங்கை நாடானது சாட்சியளிக்கின்றது என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். நம் முன்னோர்களிடமிருந்து நாம் பெற்ற மிகப் பெரிய பாரம்பரியம் நல்லிணக்கமாகும். இலங்கை நாடானது இன மற்றும் மத நல்லிணக்கத்திற்கு ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டு. துரதிர்ஷ்டவசமாக, இன்று ஒரு தேச மக்களாக நம் முன்னோர்களிடமிருந்து பெற்ற இந்த விலைமதிப்பற்ற பரிசை பராமரிக்க தவறிவிட்டோம். அரசியல்வாதிகள் இன மத வெறியை கிளரச்செய்து போரின் பக்க விளைவுகளை பரப்புவதில் வெற்றி பெற்றனர். சமூகங்களிடையே உள்ள வேறுபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் மக்களிடையே வெறுப்பைத் தூண்டுவதற்கான முயற்சிகள் இன்றும் செய்யப்படுகின்றன. நமது வேறுபாடுகளே நமது பலமாக இருக்க வேண்டும்.

போர்கள் முதலில் மக்களின் மனதில் உருவாகின்றன. ஒரு ஞானமுள்ள மனம் போரின் ஆயுதங்களை விட மிகவும் சக்தி வாய்ந்தது. நாம் நமது பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கற்பிக்க வேண்டும், அரிதான மனித வாழ்க்கையின் மதிப்பை உணரவும், அமைதியை நிலைநாட்டவும் அவர்களுக்கு அதன் பெறுமதியையும் காண்பிக்க வேண்டும்.

அரசியல் சதி வலையில் விழ முடியாத ஒரு இளம் தலைமுறையை கட்டியெழுப்ப வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் வாழ்வதற்கு உரிமை உண்டு. இரண்டு விரல்களும் ஒன்றல்லாதது போல, எல்லா மனிதர்களும் ஒரே நிறம், சாதி, மதம் கொண்டிருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்க முடியாது. பன்முகத்தன்மையை போற்றி வரவேற்கவும், பன்முகத்தன்மையில் ஒற்றுமையை நாடவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையே ஒரு பாலம் கட்ட வேண்டிய நேரம் இது. இரு சமூகங்களும் தமிழ் மற்றும் சிங்கள மொழியைக் கற்க வேண்டும், இதுவே இந்த இனக்குழுக்களை ஒன்றாக ஒட்டச்செய்யும் ஒரு பசை என நான் நம்புகிறேன்.

யுத்த நினைவுச்சின்னங்களானது போரினால் பலியானவர்களின் வாழ்க்கைகளையும், அவர்களால் விட்டுச் செல்லப்பட்ட பாடங்களையே நினைவுகூரச் செய்யவேண்டும். நினைவகமாக கட்டப்படும் நினைவுச்சின்னங்களானது அனைவரும் பார்த்து மரியாதை செலுத்தும் விதமாக நல்லதோர் இடத்தில் அமைக்கப்பட வேண்டும்.

அனைத்து இலங்கையர்களும் ஒருவருக்கொருவர் நிம்மதியுடனும் இணக்கத்துடனும் வாழ வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன்.

இலங்கையர்களிடையே அமைதி நிலவுவதே இலங்கைக்கான எனது பிரார்த்தனையாகும்.

Rajadhani Nilayam
The Netherlands