crest

யாழ்ப்பாண அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்

The Official Website of the Royal Family of Jaffna (Sri Lanka)

යාපනය රාජකීය පෙළපතේ නිල වෙබ් අඩවිය

King Statue

News

ராஜதானி நிலையத்திலிருந்து செய்தி வெளியீடு

The Coat of Arms

ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்ආර්ය චක්‍රවර්තී රාජවංශය

Arya Cakravartti Dynasty

PRESS RELEASE


மன்னார் முசலியைக் காண்பித்து நடாத்தப்பட்ட ஓர் தேர்தல் பிரச்சாரம் என் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. மக்களுக்கு என்னவிதமான சலுகைகள், தீர்வுகள் தமது கட்சியின் ஊடாக செயல்படுத்த விரும்புகின்றார்கள் என்பதை எள்ளளவும் காண்பிக்காது, ஒரு முழு மதச் சாயம் பூசி அமைக்கப்பட்டதாக இப் பிரச்சாரக் காணொளி இருந்தது. உங்கள் கட்சி பிரச்சாரங்களுக்கு யாழ்ப்பாண அரச குடும்பத்தையும், யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்களையும் இழுப்பதை நான் வண்மையாக கண்டிக்கின்றேன்! மக்களை மதச் சாயம் பூசி, மக்கள் மத்தியில் உள்ள ஒற்றுமையை இழக்கச் செய்கின்ற இந்த கட்சிப் பிரச்சாரத்தை யாழ்ப்பாண அரச குடும்பமானது எவ்விதத்திலும் வரவேற்க மாட்டாது! யாழ்ப்பாணத்தில் இதுவரை மதக் கலவரம் வரவில்லை. ஆனால் அதை உண்டாக்குவதற்கு பல சதிகள் நடக்கின்றன என்பதையும் நான் நன்கு அறிந்துள்ளேன்.


Rajadhani Nilayam
The Netherlands